Homeசெய்திகள்இந்தியா"200 இடங்களில் வென்று காட்டுங்கள்"- பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

“200 இடங்களில் வென்று காட்டுங்கள்”- பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

-

 

"200 இடங்களில் வென்று காட்டுங்கள்"- பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கம் மாநிலத்தில் பா.ஜ.க.வின் வெற்றிகாக காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உழைத்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

கிருஷ்ணா நகரில் மீண்டும் போட்டியிடும் மஹுவா மொய்த்ராவை ஆதரித்து வாக்குச்சேகரித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக குரல் கொடுத்ததால் மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 400 இடங்களையும் பெறுவோம் என பா.ஜ.க. உண்மையாக நம்பிக்கைக் கொண்டிருந்தால், சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவுவது ஏன்? என கேள்வி எழுப்பிய மம்தா வரும் தேர்தலில் பா.ஜ.க., 200 இடங்களில் கூட வெற்றிப் பெறாது சவால் விடுத்தார்.

“ஆன்லைன் ரம்மி- எத்தனை உயிர்கள் பறிபோவதை தமிழ்நாடு அரசு வேடிக்கப் பார்க்கப் போகிறது?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராகவும் தாம் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இவ்விரு கட்சிகளுக்கும் வாக்களித்தால் பா.ஜ.க.வை ஆதரித்ததாகவே பொருள்படும் என சாடினார்.

MUST READ