Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்- விரிவான தகவல்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்- விரிவான தகவல்!

-

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர். 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். அதில், நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை கொண்டு வரப்படாது, அரசியல் சாசன 8- வது அட்டவணையில் ஏராளமான மொழிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், கல்வி நிலையங்களில் பட்டியலின வகுப்பினர் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில் சட்டம் அமல்படுத்தப்படும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு முறை அனைத்து சாதியினருக்கும் விரிவுப்படுத்தப்படப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விரிவுபடுத்தப்படும் நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 2025- ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும், பணியில் இருக்கும் போது தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கான பென்சன் ரூபாய் 1,000 ஆக அதிகரிக்கப்படும். 

தேசிய கல்விக்கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும், மாநில அரசுகள் தங்களது விருப்பப்படி மாணவர் சேர்க்கையை நடத்தலாம், தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும், மருத்துவப் படிப்புக்கான நீர் தேர்வு கட்டாயமில்லை, NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர்.

‘புஷ்பா 2’ படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். அதில், நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை கொண்டு வரப்படாது, அரசியல் சாசன 8- வது அட்டவணையில் ஏராளமான மொழிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், கல்வி நிலையங்களில் பட்டியலின வகுப்பினர் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில் சட்டம் அமல்படுத்தப்படும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு முறை அனைத்து சாதியினருக்கும் விரிவுப்படுத்தப்படப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்படும் நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 2025- ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும், பணியில் இருக்கும் போது தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கான பென்சன் ரூபாய் 1,000 ஆக அதிகரிக்கப்படும்.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக துபாய் பறக்கும் ‘கோட்’ படக்குழு!

MUST READ