Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்... பா.ஜ.க.வின் கோரமுகம் அம்பலம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்… பா.ஜ.க.வின் கோரமுகம் அம்பலம்

-

 

ஒன்றிய பா.ஜ.க. அரசு வருமான வரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கை முடக்கி தனது கோரமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா? – ராமதாஸ் கேள்வி

“பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்கான நிதித் திரட்ட புது வழிமுறையை கையாண்டது. கார்ப்பரேட் கம்பெனி பெருமுதலாளிகளிடமிருந்து கையூட்டு பெறுவதற்கு பதிலாக மாற்று வழியில் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி 2018 முதல் 2023 வரை 13,000 கோடி ரூபாய் வங்கியின் வாயிலாக பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதில் பாஜகவிற்கு மட்டும் நன்கொடையாக ரூபாய் 6,572 கோடியை பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதத்திற்கு மேல் ஆகும். இந்த பரிவர்த்தனை மூலம் பெரும் ஊழல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்... பா.ஜ.க.வின் கோரமுகம் அம்பலம்

“விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட்”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6- ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பட்டியலை தேர்தல் ஆணையம் மார்ச் 13- ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோபத்தை தனித்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியை பழிவாங்க ஆரம்பித்துள்ளது. வருமான வரித் துறையை ஏவிவிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சி, இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.

இதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டின் மீது தீர்ப்பு வழங்கிய வருமான வரித்துறை ஆணையம், வங்கி கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்கு சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த நிபந்தனையின்படி ரூபாய் 185 கோடிக்கு மேல் டெபாசிட் தொகையைத்தான் காங்கிரஸ் கட்சி பயன்படுத்த முடியும். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு வங்கியில் இருக்கும் டெபாசிட் தொகை ரூபாய் 185 கோடி ரூபாய்க்கு குறைவாக இருப்பதால் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000- தொலைநோக்கு திட்டம்!

இந்த நிபந்தனைக்கு வருமான வரித்துறை கூறும் காரணம் 2018-19 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி காலம் தவறி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் 210 கோடி ரூபாயை அபராதமாக விதித்து கணக்கை முடக்கியுள்ளது.

'NDA' என்றால் என்ன?- பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!
Photo: BJP

காங்கிரஸ் கட்சி காலம் தாழ்ந்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததற்காக பெரும் தொகையை அபராதமாக விதித்து, அதற்கு இணையாக (ஈடாக) காங்கிரஸின் வங்கி கணக்குகளை முடக்குவதை விட ஒரு கொடூரமான நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் பா.ஜ.க. அரசுக்கு விழுந்த மரண அடியிலிருந்து மீள முடியாமல் விழி பிதுங்கி நிற்கிற வேளையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்குவது, அதன் மூலம் எதிர் கட்சியை செயல்படாமல் வைப்பது ஜனநாயக விரோத, அடக்குமுறை நடவடிக்கையாகும். சட்டவிரோதமாக 6,500 கோடி ரூபாய் நிதி குவித்த பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்குவது தான் நியாயம். அதற்கு பதிலாக, மக்களிடம் சட்டபூர்வமாக நிதி பெற்று வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட தொகையை முடக்கி வைப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், மின்சார கட்டணம் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளுக்கு கூட வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஏற்பட்டுள்ளது.

சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இந்திய தேசிய காங்கிரசின் வங்கி கணக்கை முடக்குவது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

MUST READ