Homeசெய்திகள்இந்தியாதீபாவளி பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க ஏற்பாடு!

தீபாவளி பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க ஏற்பாடு!

-

- Advertisement -

 

puducherry

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக, குடும்ப அட்டை ஒன்றுக்கு 490 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். அரசு அறிவித்தபடி, அரசுப் பணியாளர்கள் மற்றும் கௌரவ நியாய விலை அட்டைத்தாரர்கள் தவிர, அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு இணையான பணம் ரூபாய் 490 வீதம், 3.37 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நேரடி வங்கி பணப்பரிவர்த்தனை மூலமாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதற்காக, 16 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

MUST READ