spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு

பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு

-

- Advertisement -

பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக  குண்டு வெடிப்பு

மூன்றாவது முறையாக பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

we-r-hiring

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் அமைந்திருக்கிறது . இந்த பொற்கோயில் அருகே நேற்று நள்ளிரவில் 12 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது . லங்கர் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி சாராய் அருகே இந்த பயங்கர சத்தம் கேட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது .

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொற்கோவில் அருகே இது மூன்றாவது குண்டுவெடிப்பு சம்பவம். கடந்த சனிக்கிழமை அன்று ஹெரிடேஜ் பகுதியில் முதல் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர் . இந்த குண்டுவெடிப்பில் அருகில் இருந்த உணவகத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன .

பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக  குண்டு வெடிப்பு

திங்கள் அன்று இரண்டாவது குண்டு வெடிப்பு நடந்தது . இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். இந்த நிலையில் தான் மூன்றாவது முறையாக நேற்று நள்ளிரவில் பொற்கோவில் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதுகுறித்து அமிர்தசரஸ் காவல் ஆணையர் நவனி ஹால் சிங், நள்ளிரவு 12 மணியளவில் கட்டிடத்தின் பின்னால் பலத்த சத்தம் கேட்டது. உடனே அப்பகுதிக்கு வந்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெடி பொருள் மாதிரிகளை சேகரித்து வருகின்றார்கள் . தற்போது வரை இந்த வெடிப்பு குண்டு வெடிப்புக்கான காரணம் தெளிவுபடுத்தப்படவில்லை . பொற்கோவில் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

MUST READ