Homeசெய்திகள்இந்தியாஅதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி

-

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

Accident

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் ஏலூரில் உள்ள ராமசந்திரா பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வரும் மாணவர்கள் 6 பேர் காரில் மருதுமில்லி சென்று நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஏலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ​​கார் கோகவரம் அருகே அதிவேகமாக சென்று கட்டுபாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை மோதி ஆற்றில் கவிழ்ந்தது.

car accident

இதில் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் தப்பி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் டிரைவர் சீட்டில் சீட் பெல்ட் அணிந்தபடி சடலமாக இருந்தவரின் உடல் மீட்கப்பட்டது. மற்ற மூன்று பேரை மீனவர்கள் மூலம் அப்பகுதியில் ஆற்றில் முழ்கி இறந்தவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இறந்த நான்கு பேரும் பொறியியல் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ