மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நல்வாய்ப்பாக பயணிகள் காயம் இன்றி தப்பியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்துரில் இருந்து ஜபல்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 5 மணி அளவில் ஜபால்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சின் அருகில் உள்ள 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதால், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.


இதனை அடுத்து, ரயில் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
