தமிழக ஆளுநர் சட்டம் அறிந்திருப்பார் என நினைத்தேன். ஆனால் ஆளுநரோ பா.ஜ.க ஏஜெண்டாக செயல்படுகிறார் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளாா்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ஆளுநர் இந்த நேரம் த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். தமிழக ஆளுநர் சட்டம் அறிந்திருப்பார் என நினைத்தேன். ஆனால் ஆளுநர் பா.ஜ.க ஏஜெண்டாக செயல்படுகிறார். ஆளுநர் அ.தி.மு.க – தி.மு.க இணைய வேண்டும் என தாமதம் செய்கிறார் என பத்திரிகை செய்தி மூலம் அறிந்தேன்.
தேர்தலுக்கு பின்பு எவருக்கும் அருதி பெரும்பான்மை இல்லை என்றால் எந்த கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதோ அந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

மேலும் பெரும்பான்மையை ஆளுநர் அலுவலகத்தில் நிரூபிக்க வேண்டியது இல்லை. ஆட்சி அமைக்க அழைத்து பின்னர் சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். சட்டமன்றத்தில் அருதி பெரும்பான்மை இல்லை என்றாலும் சட்டமன்றத்தில் வேறு கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தார்கள் என்றாலும் பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி தொடர முடியும்.
ஆளுநர் பா.ஜ.க.வின் நடவடிக்கைக்காக காலம் தாழ்த்துகிறார். ஆளுநர் பெரும்பான்மை உறுப்பினர்கள் பட்டியலை கேட்க முடியாது, இது அரசியல்சாசனத்துக்கு எதிரானது. தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆளுநர் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து கேட்க முடியாது. சட்ட நிவாரணம் கோரி த.வெ.க எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம். ஆளுநர் த.வெ.க கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்” என கபில் சிபல் கூறியுள்ளாா்.
திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?
