- Advertisement -
பான் எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
மார்ச் 31ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிவடைய இருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் பான் அட்டைகளை இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் நிரந்தர கணக்கு எண் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல் இழந்து விடும்.
அதன் பிறகு 30 நாட்களுக்குள் ஆயிரம் செலுத்தினால் பான் எண் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். பான் ஆதார் அட்டைகளை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்படுவது இது ஐந்தாம் முறையாகும்.
இதுவரை 51 கோடி பான் எண்கள் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.