Homeசெய்திகள்இந்தியாபுத்தாண்டில் அறிமுகமாக உள்ள கூகுள் மேப்ஸின் முகவரி விளக்க வசதி!

புத்தாண்டில் அறிமுகமாக உள்ள கூகுள் மேப்ஸின் முகவரி விளக்க வசதி!

-

 

புத்தாண்டில் அறிமுகமாக உள்ள கூகுள் மேப்ஸின் முகவரி விளக்க வசதி!

இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் முகவரி விளக்கங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதியானது சர்வதேச அளவில் முதன்முறையாக இந்தியாவில் தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் அனுமதி இன்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ்

இந்த முகவரி விளக்க வசதியின் மூலம் பயனாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து செல்ல வேண்டிய பகுதிகான திசை மற்றும் அங்கு அருகில் உள்ள ‘Land Mark’ உள்ளிட்டவற்றைத் தெரிந்துக் கொள்ள முடியும் என்று கூகுள் மேப்ஸ் கூறியுள்ளது.

நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு திசையை அறிந்துக் கொள்ளும் வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த வசதி இந்தியாவில் 3,000- க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆண்ட்ராய்டு செயலி மூலம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத ஷாருக்கானின் டன்கி… ப்ரீ புக்கிங் விவரம் இதோ…

மேலும், புத்தாண்டு தொடக்கத்தில் லென்ஸ் அண்ட் மேப்ஸ் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருக்கும் அவர், இதன் மூலம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள கடைகள் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ