spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஹரியானாவின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி!

ஹரியானாவின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி!

-

- Advertisement -

 

ஹரியானாவின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி!

we-r-hiring

ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி.

முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்… புதுச்சேரியில் படப்பிடிப்பு தீவிரம்…

ஹரியானா மாநில முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டார், தனது முதலமைச்சர் பதவி, தனது தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் மனோகர் லால் கட்டார். வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, மனோகர் லால் கட்டார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழு தலைவரைத் தேர்வு செய்வதற்காக நடந்த கூட்டத்தில், ஹரியானா மாநில முதலமைச்சராக நயப் சைனி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.

சென்னையில் ஒரே இடத்தில் படப்பிடிப்பு… இரு இளம் நடிகர்கள் பங்கேற்பு…

இதையடுத்து, இன்று (மார்ச் 12) மாலையே நயப் சைனி பதவி ஏற்பார் என்றும், புதிய அமைச்சரவையும் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ