Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி: 2.5 லட்சம் கடைகள் மூடல்; ரூ.10,000 கோடி வர்த்தக இழப்பு...

டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி: 2.5 லட்சம் கடைகள் மூடல்; ரூ.10,000 கோடி வர்த்தக இழப்பு என வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக, நகரின் முக்கிய வர்த்தக மையங்களில் வணிக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

we-r-hiring

2.5 லட்சம் கடைகள் மூடல் – ரூ.10,000 கோடி இழப்பு

டெல்லி வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள 20 முதல் 25 முக்கிய சந்தைகளில் சுமார் 3 லட்சம் கடைகள் உள்ளன. இவற்றில் 80 சதவீதத்திற்கும் அதிகமான, அதாவது சுமார் 2.5 லட்சம் கடைகள் ஞாயிற்றுக்கிழமையன்று முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தீபாவளி மற்றும் தனத்திரயோதசி போன்ற பண்டிகைக் காலத்தின் உச்சகட்ட விற்பனை நாளில் பேரணி நடைபெற்றதால், டெல்லி வர்த்தகர்களுக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.11,000 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் கூட்டமைப்பு (CTA) தெரிவித்துள்ளது.

போக்குவரத்து முடக்கம் – வெளிமாநில வாடிக்கையாளர்கள் வரத்து பாதிப்பு

பேரணி மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக டெல்லியின் வர்த்தக நடவடிக்கைகள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டதாகக் கடைக்காரர்களும் வர்த்தக அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

டெல்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் வர்த்தகத்திற்காக வரும் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள், பேரணி மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக நகருக்குள் வர முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

மேலும், பழைய டெல்லி மற்றும் மத்திய டெல்லி சந்தைகளுக்குச் செல்ல வேண்டிய டெம்போ, லாரி உள்ளிட்ட சுமார் 5,000 சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய முடியாமல் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் சரக்குகளை ஏற்றுவதும் இறக்குவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்திருந்த சில கடைகளிலும் வாடிக்கையாளர்களின் வருகை இல்லாததால் விற்பனை நடைபெறவில்லை எனக் கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் கேட் மற்றும் முக்கியச் சந்தை அமைப்புகள் எதிர்ப்பு

பேரணிக்கு முன்னதாகவே காஷ்மீர் கேட்டில் இயங்கும் வாகன பாகங்கள் வியாபாரிகள் சங்கம் (APMA) உள்ளிட்ட பல வர்த்தக அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக மையங்களில் சிலவாகக் கருதப்படும் சாவ்ரி பஜார், சாந்தினி சவுக், சதர் பஜார், தர்யாகஞ்ச் மற்றும் மோரி கேட் ஆகிய சந்தைகள் ராம்லீலா மைதானத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்குள் அமைந்துள்ளன.

இதுகுறித்து APMA தலைவர் வினய் நாரங் கூறுகையில், “நாங்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானவர்களோ அல்லது ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிரானவர்களோ அல்ல. ஆனால், பண்டிகைக் காலத்தில் டெல்லியின் மையப் பகுதியில் இத்தகைய பேரணியை நடத்தியது நேர அமைப்பின்படி மிகவும் தவறானது” எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி வேண்டுகோள்

வர்த்தகர்களின் கவலை குறித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பேரணியில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து டெல்லிக்கு வரும் லட்சக்கணக்கான மக்கள், அங்குள்ள சிறு வணிகர்களிடம் பண்டிகைக் காலப் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவிலும் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். மேலும், பாஜக வேண்டுமென்றே அச்சத்தைப் பரப்பி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

பேரணையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் வர்த்தக இழப்பு, போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகள் தொடர்பாக டெல்லியில் விவாதம் எழுந்துள்ளது.

மோடி – அமித்ஷா ஆட்சி முடிவுக்கு வருகிறது? டெல்லியை உலுக்கிய  ‘வாக்குத் திருட்டு’ பூகம்பம்! எதிர்க்கட்சிகள் இம்பீச்மெண்ட் அதிரடி!

MUST READ