
முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. ஜிபே, ஃபோன்பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?
உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வரும் இந்தியாவின் யுபிஐ சேவையை பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பிரான்ஸும் இணைந்துள்ளது. பாரீஸில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள நடைபெற்ற நிகழ்ச்சியில் NPCI- ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்ஸின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன.
இதன்படி, இனி பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் அங்கு யுபிஐ- யை பயன்படுத்திப் பணம் செலுத்த முடியும். குறிப்பாக, ஈபிள் டவர் பார்க்க வேண்டும் எனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.
மொட்டை தல காத்தவராயன்….. தனுஷின் ‘D50’ பட அப்டேட்!
இது யுபிஐ பணப்பரிவர்த்தனையை உலகளாவிய அளவில் கொண்டுச் செல்வதற்கான முக்கிய வழியைக் குறிப்பிடுவதாக மகிழ்ச்சித் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கு வலுவான உறவுகளை வளர்ப்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணம் சென்று குறிப்பிட்டுள்ளார்.