Homeசெய்திகள்இந்தியாதொழில்துறை டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்வு: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி

தொழில்துறை டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்வு: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி

-

- Advertisement -

இந்தியாவில் சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், தொழில்துறை மற்றும் மொத்தமாக டீசல் வாங்குபவர்களுக்கான (Bulk Diesel) விலையை லிட்டருக்கு ரூ.22 உயர்த்தி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன.தொழில்துறை டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்வு: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடிசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சாதாரண வாகன ஓட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், சில்லறை விற்பனை நிலையங்களில் (Retail Outlets) விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், தொழிற்சாலைகள் மற்றும் மொத்த நுகர்வோருக்கு இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

we-r-hiring

இந்த திடீர் விலை உயர்வால் பின்வரும் துறையினர் பெரும் பாதிப்பைச் சந்திப்பார்கள்:

போக்குவரத்துத் துறை: அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து கழகங்கள்.

ரயில்வே: அதிக அளவில் டீசலைப் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறை.

தொழிற்சாலைகள்: மின் உற்பத்தி மற்றும் இயந்திரங்களை இயக்க டீசலைப் பயன்படுத்தும் பெரிய தொழிற்சாலைகள்.

மால் மற்றும் வணிக வளாகங்கள்: ஜெனரேட்டர்களுக்காக அதிக அளவில் டீசல் வாங்கும் பெரிய வணிக நிறுவனங்கள்.

இந்த விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மொத்தமாக டீசல் வாங்குவதை விட, சில்லறை விற்பனை நிலையங்களில் வரிசையில் நின்று டீசல் வாங்குவது மலிவானதாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. இது சில்லறை விற்பனை நிலையங்களில் கூட்டத்தை அதிகரிக்கக்கூடும்.

ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!

MUST READ