Homeசெய்திகள்தமிழ்நாடுஈரான் போர் எதிரொலி - ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!

ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!

-

- Advertisement -

ப்ரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ஈரான் போர் எதிரொலி - ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!

we-r-hiring

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில், இந்தியாவில் ப்ரீமியம் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக, ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சப்ளை சிக்கல்கள் உள்நாட்டு விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், சாதாரண பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ப்ரீமியம் பெட்ரோலுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீமியம் பெட்ரோல் வாகன இன்ஜின்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் பயன்படுகிறது. இது எரிபொருள் சிக்கனத்தை அதிகரிப்பதுடன், இன்ஜின்களில் உருவாகும் கார்பன் துகள்களை குறைத்து அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது. மேலும், வாகனங்களின் புகை வெளியீட்டை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், உயர்தர செயல்திறனை விரும்பும் வாகன ஓட்டிகள் ப்ரீமியம் பெட்ரோலை தேர்வு செய்து வருகின்றனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவில் எரிபொருள் விலைகளில் தாக்கம் ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போதைய உலகளாவிய அழுத்தங்களை சமாளிக்கும் முயற்சியாகவே இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

MUST READ