Homeசெய்திகள்இந்தியா“ஆதித்யா எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய்” இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகீர்..!!

“ஆதித்யா எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய்” இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகீர்..!!

-

 

somanath

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தெரிவித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கே. சிவனின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் சோம்நாத். இவருடைய நிர்வாகத்தில் இஸ்ரோ அமைப்பு பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை செய்து வருகிறது. சந்திராயன் 3 மிஷன் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அதையடுத்து இந்தியாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் ஆதித்யா எல் 1 வின்னோடம் அனுப்பி வைக்கப்பட்டது. சரியாக 4 மாதங்கள் பூமியில் இருந்து பயணம் செய்து, நடப்பாண்டு ஜனவரி 6ம் தேதி ஆதித்யா எல் 1 சாட்டிலைட் திட்டமிடப்பட்ட எல் 1 சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

அதனால் உலகளவில் விண்வெளித்துறை சார்ந்த அறிஞர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஆய்வாளராக மாறியுள்ளார் சோம்நாத். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் Dark Media House என்கிற ஊடகத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

“சந்திரன்ன் 3 ஏவுதலின் போது எனக்கு நிறைய உடல்நலப் பிரச்னைகள் இருந்தன. ஆனால் அதுசார்ந்த பணிகளில் மும்முரமாக இருந்ததால் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆதித்யா எல்1 சாட்டிலைட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் நடந்து வந்தன. அப்போது எனது உடல்நலப் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

அந்த சமயத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் கட்டி இருப்பது தெரிந்தது. உடனடியாக அந்த தகவலை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் கூறிவிட்டேன். அதன் பின்பு தான் நிம்மதியாக இருந்தது. சென்னையில் அதற்காக சிகிச்சை மேற்கொண்டபோது, வயிற்றில் இருந்தது புற்றுநோய் கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.

நான்கு நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு, ஐந்தாம் நாளில் வலியின்றி மீண்டும் வேலைகளை தொடங்கினேன். அப்போது தான் ஆதித்யா எல் 1 விண்ணில் ஏவப்பட்டது. அதற்கு பிறகு தான் புற்றுநோய் கட்டிக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கீமொதெரப்பியும் எடுத்துக்கொண்ட்டேன்.

எப்போதும் ஒவ்வொரு வருடமும் உடல்நலன் குறித்து பரிசோதனை மேற்கொள்வது உண்டு. ஆனால் பணிகள் காரணமாக சில ஆண்டுகள் செய்யாமல் விட்டுவிட்டேன். அதன்பலனாக இந்த பாதிப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது நான் முழுமையாக குணமாகிவிட்டேன். வழக்கம்போல எனது பணியினை செய்து வருகிறேன் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

அவருடைய இந்த பேட்டி ஊடகங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பலர் சமூக ஊடகங்களில் அவருடைய உடல்நிலை குறித்து கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ