Homeசெய்திகள்இந்தியாரயில் நிலையத்தை அழகுபடுத்தும் பணியின் போது கோர விபத்து... இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் 50 பேர்..!

ரயில் நிலையத்தை அழகுபடுத்தும் பணியின் போது கோர விபத்து… இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் 50 பேர்..!

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் உள்ள ரயில் நிலைய வளாகத்தில் சில மணி நேரங்களுக்கு முன் பெரிய விபத்து நிகழ்ந்தது. இங்கு மத்திய அரசின் அமிர்த பாரத் யோஜனாவின் கீழ் கட்டப்பட்டு வந்த புதிய இரண்டு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய ஒரு தொழிலாளி அழுது கொண்டே நடந்த கொடூரமான சம்பவத்தை விவரித்தார். அவரைப் பொறுத்தவரை, 40 முதல் 50 தொழிலாளர்கள் புதையுண்டுள்ளதாக அதிர்ச்சி தெரிவிக்கிறார். மீட்புப் பணி நடந்து வருகிறது. இப்போது வரை வரை, 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

இதுகுறித்து மகேஷ் குமார் என்கிற தொழிலாளி கூறுகையில், ‘‘நான் மதிய உணவு சாப்பிடச் சென்றேன். 40 முதல் 50 பேர் பணியில் ஈடுபட்டிருந்தோம் பலரை காண முடியவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். ரயில் நிலைய விபத்து குறித்து சமூக நலத்துறை இணையமைச்சரும், கன்னோஜ் எம்எல்ஏவுமான அசிம் அருண் கூறுகையில், ‘‘இதுவரை 23 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக லக்னோவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தில் பல தொழிலாளர்கள் புதைந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை அகற்றி சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவாரணம், மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன’’ என அவர் தெரிவித்துள்ளார்.

திடீர் சம்பவத்திற்குப் பிறகு இந்த மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர். அவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகள் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

கன்னோஜ் மாவட்டத்தில் நடந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், காயமடைந்த அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் யோகி வாழ்த்து தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் சம்பவ இடத்திலிருந்து தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

கன்னோஜ் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் அழகுபடுத்தும் பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இங்கு கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் நிவாரணக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

MUST READ