
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலம் முழுவதும் கன்னட சங்கங்கள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்
முழு அடைப்பையொட்டி, பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி. கல்லூரிகளுக்கு இன்று (செப்.29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, பெங்களூருவில் 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், சாலையோரக் கடைகள், தனியார் பேருந்துகள், தனியார் வாகனகங்கள் உள்ளிட்ட 1,900 சங்கங்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் ஜூஜூ வாடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது.