spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்திருக்கிறது.

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

we-r-hiring

சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.

“வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசியபோது ‘இன்னும் கணக்கு எடுக்க முடியவில்லை எனவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். கேரளாவுக்கு தேவையான உதவிகள் அனைத்து செய்யப்படும் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழுவும், நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் தேவை என்றால் உதவி வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து ஆளுநர் பதவி நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, “நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை” என்று கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் கிளம்பியுள்ளார்.

MUST READ