Homeசெய்திகள்இந்தியா"நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்"-இஸ்ரோ அறிவிப்பு!

“நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்”-இஸ்ரோ அறிவிப்பு!

-

 

"நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்"-இஸ்ரோ அறிவிப்பு!
Photo: ISRO

சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேடிஎம் 390 பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்

முன்னதாக, ஆகஸ்ட் 23- ஆம் தேதி மாலை 05.45 மணிக்கு லேண்டர் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலவை நோக்கி நெருங்கும் லேண்டர் ஆகஸ்ட் 23- ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவிலிருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவில் லேண்டர் பயணித்து வருகிறது. நிலவை நெருங்கும் லேண்டரின் சுற்று வட்டப்பாதை அதிகாலை 02.00 மணியளவில் குறைக்கப்பட்டது.

மோடிக்கு ஓட்டுப்போட்ட விரலை துண்டித்த சகோதரர் – அண்ணன் தற்கொலையை விசாரிக்காததால் விரக்தி

நிலவின் தென்துருவத்தில் ஆய்வுச் செய்வதற்காக ஜூன் 14- ஆம் தேதி சந்திரயான்- 3 விண்கலம் செலுத்தப்பட்டது. சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி தனித்தனியாகப் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ