வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மானிய விலையிலான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
புதிய அறிவிப்பின் படி, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 550 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானிய விலையிலான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தமிழ்நாட்டில் 853 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவை குறைந்த விலையில் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இதுவரை 41 ஆயிரத்து, 338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை ஈடுகட்டும் விதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு விவகாரம்-முன்ஜாமீனை நீடித்தது சென்னை உயா்நீதிமன்றம்