Homeசெய்திகள்இந்தியாமுன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்!

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்!

-

 

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்!
File Photo

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடந்த 1958- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவரான மனோகர் சிங் கில், பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளக் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முதலமைச்சராக இருந்த போது, இளம் அதிகாரியாக பணியாற்றியவர்.

ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!

கடந்த 2008- ஆம் ஆண்டில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராகவும் செயல்பட்ட எம்.எஸ்.கில், உடல்நலக்குறைவுக் காரணமாக, டெல்லியில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ஐ.ஏ.எஸ்., முன்னாள், இன்னாள் அதிகாரிகள், தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

MUST READ