Homeசெய்திகள்இந்தியாமகுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்!

மகுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்!

-

 

மகுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்!
File Photo

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவைப் பதவி நீக்கம் செய்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

மகுவா மொய்த்ரா தனது தரப்பை விளக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த மகுவா மொய்த்ரா, “முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுபான்மையினர் என அனைவரது உரிமைகளையும், மத்திய அரசு பறிக்கிறது. 300- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.வில் இஸ்லாமிய உறுப்பினர் ஒருவர் கூட கிடையாது.

டிச.26- ல் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது!

தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. அரசின் முடிவு காலம் நெருங்கிவிட்டது. அதானி மீது மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ