spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே!

-

- Advertisement -

 

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே!

we-r-hiring

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரம் கேட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத விவரங்கள் தங்களுக்கு தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் விளக்கினால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறாகப் பேச மாட்டீர்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலன் கருதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத விவரங்களை பிரதமர் தவறாகக் கூறுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

நாளை (ஏப்ரல் 26) கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவின் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ