spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"மம்தா பானர்ஜியின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?"- விரிவான தகவல்!

“மம்தா பானர்ஜியின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?”- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

"மம்தா பானர்ஜியின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?"- விரிவான தகவல்!

we-r-hiring

மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வீட்டில் கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?

அவரது நெற்றி மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் நெற்றியில் தையல் இடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஸ்கேன் உள்ளிட்ட ஆய்வுகள் செய்யப்பட்டதில், அவரது நினைவாற்றலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவரது உடல்நிலை மற்றும் மனநிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்தியதுடன், அவர் வீடு செல்ல விருப்பம் தெரிவித்ததால் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவ ஆய்வில் அவரை பின்னால் ஏதோ தள்ளியிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!

முன்னதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி காயமடைந்தது குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மம்தா பானர்ஜி விரைவில் நலம் பெற வேண்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

MUST READ