spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமணிப்பூர் மாநிலத்தில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

மணிப்பூர் மாநிலத்தில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

-

- Advertisement -

 

மணிப்பூர் மாநிலத்தில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

we-r-hiring

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

திரையுலகை கிறங்கடிக்கும் ஆவேஷம்… படத்தை பாராட்டிய சாம்…

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெற்றது. அதில், மணிப்பூரில் வாக்குப்பதிவின் போது, பல வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்தது.

துப்பாக்கியுடன் வாக்குச்சாவடியை நோக்கிச் சிலர் நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது. கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பதிவு மையங்களை கைப்பற்றும் முயற்சிகளும் அரங்கேறினர். வன்முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதன் காரணமாக, அப்பகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான உத்தரவைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. அதன்படி, மணிப்பூர் தொகுதிக்குட்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ரூ.70 லட்சத்தில் வைர வாட்ச்… கவனம் ஈர்க்கும் சமந்தா…

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ