மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி போராடி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடியின மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில், வாகனங்கள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் கட்டிடங்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. வன்முறை வெடித்த நிலையில், பல்வேறு மாவட்டங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூரில் 80 நாட்களுக்கு முன் காணாமல்போன 2 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தடியடியில் 30 பேர் காயமடைந்தனர். மாணவர்களின் இறப்புக்கு நீதிகேட்டு இம்பால் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுவதால் 5 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதால், இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் வாட்ஸ் அப் மூலம் போலி வீடியோக்கள் பரவுவதால் இணையதளம் முடக்கப்பட்டுள்ளத்யு. இணையதளங்களில் போலி வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.