
இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 2008- ஆம் ஆண்டு நவம்பர் 26- ஆம் தேதி மும்பை பயங்கரவாதத் தாக்குதலை யாரும் மறந்துவிட முடியாது. அதேபோல், கடந்த 1949- ஆம் ஆண்டு இன்றைய தினம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையும் நினைவுக் கூர்ந்தார். உள்ளூர் பொருட்களை வாங்க தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க, தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைக் காலங்களில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளூர் தயாரிப்புப் பொருட்களை மக்கள் வாங்கி இருக்கின்றனர்.
“எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்!
பண்டிகை நாட்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு பணப்பரிமாற்றத்தைச் செய்யாமல், டிஜிட்டல் பரிவர்த்தனைச் செய்து பணத்தைச் செலுத்த வேண்டும். இந்தியர்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்துக் கொள்வதைத் தவிர்த்து, இந்தியாவில் ஏற்பாடுகளைச் செய்து நடத்த வேண்டும்.
இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.