
வடமேற்கு வங்கக்கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாகவும், அந்த புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?
ஒடிஷாவில் இருந்து 190 கி.மீ. தொலைவில் கிழக்கு திசையில் ‘மிதிலி’ புயல் நிலைக்கொண்டுள்ளது. 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், நாளை (நவ.18) அதிகாலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது, அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த ‘மிதிலி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!
இதனிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலைத் தொடர்ந்து, சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.