spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விபத்து- பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விபத்து- பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

-

- Advertisement -

மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விபத்து- பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Image

மிசோரமில் நிகழ்ந்த பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

we-r-hiring

Bridge

இது குறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,”மிசோரமில் நிகழ்ந்த பாலம் விபத்து வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ