- Advertisement -

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.04) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தடுப்பைத் தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில்!
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்-கின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!
துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை அக்கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


