
வீட்டு பெண் உதவியாளரை பொது இடத்தில் வைத்து அவமதித்தத நடிகர் ரஜினிகாந்த் செயலை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. அதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் ஜாம்நகருக்கு சென்றுள்ளார்.
விமான நிலையத்துக்கு வெளியே புகைப்படக்காரர்களுக்கு குடும்பத்துடன் போஸ் கொடுக்க அவர் முயன்றார். அப்போது அவர்களுடன் இருந்த ரஜினி வீட்டுப் பணியாளரும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வந்தார்.
அதை பார்த்த ரஜினிகாந்த் உடனடியாக அவரை விலகி நிற்கும்படி கைகளால் சைகை செய்தார். ரஜினிகாந்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தன் வீட்டுப் பணியாளரை ரஜினிகாந்த் அவமதித்துவிட்டதாக கூறி வருகின்றனர்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட ஒரு பயனர் ”மிகவும் ஏமாற்றுக்கார ஒரு ஹீரோ ரஜினி. பேருந்து நடத்துராக சாதாரண பின்னணியில் இருந்து வந்தவரான ரஜினி, எளிய மக்களுக்கும் சரி… தனது மருமகனுக்கும் மதிப்புக் கொடுக்க தெரியாதவர். அதனால் தான் மருமகன் அவருடைய மகளிடம் இருந்து விவகாரத்து வாங்கி சென்றுவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு நபர், ”வீட்டு பெண் பணியாளரிடம் ரஜினி நடந்துகொண்டது கவலை அளிக்கிறது. அவரது ரசிகனாக இருப்பதற்கு வெட்கி தலைகுனிகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இதுதான் இவருடைய உண்மையான நிறம். இப்படிப்பட்ட நபரை எப்படி தமிழ்நாடும் தமிழர்களும் கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.
சமூகவலைதளத்தில் ரஜினியின் செயலை கண்டித்துள்ள ஒரு நெட்டிசன், முன்னதாக ரஜினிகாந்த் தனது பணியாளரை விலகிச் செல்லுமாறு கூறுகிறார். பின்னர் ஒரு பாதுகாவலரை அழைத்து பணியாளரை வெளியே அனுப்புமாறு தெரிவிக்கிறார். இது முற்றிலும் மலிவான செயல் என்று பதிவிட்டுள்ளார்.