
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.
கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!
தமிழகத்தைச் சேர்ந்த ஜெய சுகின் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாடாளுமன்ற அவைகளைக் கூட்டவும், கலைக்கவும் உத்தரவுப் பிறப்பிக்கும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவர். ஆளுநர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட அரசியல் சாசன பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களை சட்டமாக்க, அவர் தான் ஒப்புதல் அளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் அங்கம் எனவும், அவரைத் திறப்பு விழாவிற்கு அழைக்காதது, அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க, மக்களவைச் செயலகத்திற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வரும் மே 28- ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.