அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது – நிர்மலா சீதாராமன்
அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
ஒன்றிய மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களான எஸ்பிஐ, எல்ஐசி நிறுவனங்களின் பங்குகளை மோடியின் நண்பர் அதானி கம்பெனிகளுக்கு விற்றதால், பொதுத்துறை நிறுவனங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் மக்களவை உறுப்பினர் தீபக் பாய்ஜ் அத்னானி நிறுவன கடன் விவகாரம் குறித்து லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின்படி, எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது. ஆகவே அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது.