spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்!

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்!

-

- Advertisement -

 

we-r-hiring

கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

தூள் கிளப்பும் குண்டூர் காரம்… படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்…

தலைநகர் டெல்லியில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. கடும் குளிர் எதிரொலியாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். குருகிராம் சாலை, வசந்த் விகார், ஆனந்த் விகார், விவேக் விகார், சாந்தி பாத் உள்ளிட்ட பகுதிகளை அடர் பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்லியில் காலையில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பநிலை சரிந்ததால், வாகனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி படர்ந்தது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்களை கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.

தனுஷின் 51வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

அடுத்த ஐந்து நாட்களுக்கு வடஇந்தியாவில் அடர்த்தியானது முதல் மிக அடர்த்தியான மூடுபனி நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

MUST READ