Homeசெய்திகள்இந்தியாபாமாயிலுக்கு மூலாதாரமான எண்ணெய் பனை உற்பத்திக்கு ஊக்கம்!

பாமாயிலுக்கு மூலாதாரமான எண்ணெய் பனை உற்பத்திக்கு ஊக்கம்!

-

 

பாமாயிலுக்கு மூலாதாரமான எண்ணெய் பனை உற்பத்திக்கு ஊக்கம்!
File Photo

பாமாயிலுக்கு மூலாதாரமாக திகழும், எண்ணெய் பனை சாகுபடியை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசுத் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?

எண்ணெய் பனை சாகுபடியை 10 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து, இன்னும் மூன்று ஆண்டுகளில் அதன் உற்பத்தியை 11.2 லட்சம் டன்னாக உயர்த்த மத்திய வேளாண் அமைச்சகம், திட்டமிட்டுள்ளது. இதற்காக, தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் என்ற மிகப்பெரிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் எண்ணெய் பனை நடும் திட்டம், கடந்த ஜூலை 25- ஆம் தேதி தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை எண்ணெய் பனை விதைகள் நடப்படும் என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோத்ரேஜ், பதஞ்சலி உள்ளிட்ட மூன்று தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப உற்பத்தி இல்லாத நிலை உள்ளது. பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நிலைமையை சமாளிக்க வேண்டியுள்ளது.

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு- நான்கு பேர் உயிரிழப்பு!

சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

MUST READ