Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?

-

 

டெல்லி மாநில அதிகாரிகள் நியமன மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 31) தாக்கலாகும் என கருதப்படும் நிலையில், அது பெரிய அமளியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த இரண்டு வாரங்களாக அமளி நிலவி, அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்றம் இன்று (ஜூலை 31) மீண்டும் கூடுகிறது. இதில், இன்று டெல்லி மாநில அரசின் அதிகாரிகள் நியமன மசோதாவை, மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…

இதற்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மசோதாவை தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்றும் அமளி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானமும் இந்த வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ