Homeசெய்திகள்இந்தியா'மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்'- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி...

‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!

-

 

'மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்'- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
File Photo

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!

கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. அதன்படி, 2019- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை 13.13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போகியுள்ளனர். இதில், அதிகபட்சமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் சுமார் 2 லட்சம் பெண்கள் காணாமல் போகியுள்ளனர்.

“பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டும்”- தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!

18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 10.61 லட்சம் பேரும், சிறுமிகள் 2.51 லட்சம் பேரும், கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போகியுள்ளனர். இந்த பட்டியலில் மேற்கு வங்கம் மாநிலம் இரண்டாமிடம் வகிக்கிறது.

MUST READ