Homeசெய்திகள்இந்தியா"பழைய நாடாளுமன்றத்திற்கு விடைக் கொடுக்கும் நேரம் வந்து விட்டது"- பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

“பழைய நாடாளுமன்றத்திற்கு விடைக் கொடுக்கும் நேரம் வந்து விட்டது”- பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

-

 

"பழைய நாடாளுமன்றத்திற்கு விடைக் கொடுக்கும் நேரம் வந்து விட்டது"- பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!
Photo: Sansad TV

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நாம் அனைவரும் விடைக் கொடுக்கும் நேரம் இது. இந்தியர்களின் பணத்தாலும், வியர்வையாலும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது.

மகளிர் உரிமை திட்டத்தில் ரூ.1,000 வரவில்லை?- நாளை முதல் உதவி மையம்

சந்திரயான்- 3ன் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்துள்ளது. ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் உறுதியை எடுத்துக் காட்டும் வகையில் சந்திரயான்- 3 வெற்றி அமைந்துள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாடு விடையளித்துள்ளது.

சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்- திருமாவளவன்

ஜி20 வெற்றி என்பது எந்த ஒரு தனிநபர் வெற்றி அல்ல (அல்லது) கட்சியின் வெற்றி அல்ல. ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி இந்திய மக்களின் வெற்றி. இந்த நாடாளுமன்றம் குறித்து பல்வேறு நினைவுகள் உள்ளது. நாடாளுமன்றத்தில் முதல்முறை நுழைந்த போது, நான் கீழே விழுந்து வணங்கிவிட்டே நுழைந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

MUST READ