Homeசெய்திகள்இந்தியாஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை நடைத்திறப்பு!

ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை நடைத்திறப்பு!

-

- Advertisement -

 

சபரிமலை - Sabarimala ayyappan Temple

we-r-hiring

ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை நடைத்திறக்கப்பட்டது. தந்திரி கண்டருரு ராஜிவரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபம் ஏற்றினார்.

ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

சிறப்பு பூஜையை முன்னிட்டு, சபரிமலைக்கு திரளான பக்தர்கள் வருகைத் தருவார்கள் என எதிர்பார்ப்பதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 29- ஆம் தேதி இரவு ஹரிவராசனம் பாடி சபரிமலை நடைச் சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓணம் பண்டிகையையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பு அன்னதானமும் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் குறித்த அறிவிப்பு!

இதனையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக, வரும் செப்டம்பர் மாதம் 17- ஆம் தேதி மாலை கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

MUST READ