Homeசெய்திகள்இந்தியாபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?

-

 

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?
File Photo

இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைக்காமலும், உயர்த்தாமலும் எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வந்தன. எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் ஆகியவற்றின் விலை மட்டும் மாதந்தோறும் மாற்றியமைத்து வந்தன.

ஆளுநருக்கு தைரியம் இருந்தால் அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்- முரசொலி

383- வது நாளாக இன்றும் விலைமாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 102.63 ஆகவும், டீசல் விலை ரூபாய் 94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த நிலையிலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காமல் இருந்த காரணத்தினால், நிறுவனங்கள் இழப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையின் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சாதிய ரீதியில் பேசி துன்புறுத்தல்’ ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்

பெட்ரோல், டீசல் விலை குறையும் பட்சத்தில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாகக் குறையும் என்று கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள். மேலும், சாமானிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ