spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

“17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

-

- Advertisement -

 

"17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
Photo: SANSAD TV

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மத்திய பா.ஜ.க. அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அறுதி பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களால் மிகவும் விரும்பப்படும் பிரதமராக மோடி திகழ்கிறார். ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றைத் தோற்கடித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்துள்ளார்.

we-r-hiring

‘மாவீரன்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்…… நெகிழ்ச்சியடைந்த சிவகார்த்திகேயன்!

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. மக்களிடம் ஒரு மாயையை உருவாக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். நரசிம்மராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதாயத்தை காட்டியே காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. வாஜ்பாய்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, பா.ஜ.க. அதை செய்யவில்லை. கடந்த 2014- ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் மோடி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

நரசிம்மராவ் அரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆதரிக்க லஞ்சம் பெற்ற முக்தி மோர்சாவினர் சிறை சென்றனர். மன்மோகன் சிங் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்த போது, லஞ்சப்பணம் கொண்டு வரப்பட்டது. ஒரே ஒரு வாக்கில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் மீண்டும் ஆட்சி அமைத்தார் வாஜ்பாய்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா காம்போவின் குஷி….. அசத்தலான ட்ரெய்லர் வெளியானது!

சமையல் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி அதிக பெண்கள் சமைக்க தொடங்கினார்கள். 11 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் மோடி ஆட்சியில் கட்டப்பட்டுள்ளன. அரசியல் உள்நோக்கங்களுக்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஓய்வில்லாமல் நாளொன்றுக்கு 17 மணி நேரம் உழைத்து வருகிறார். விவசாயிகள் நலனுக்காக ஆண்டுக்கு ரூபாய் 6,000 வழங்கி வருவது மோடி அரசு தான்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ