
உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சார காரை பரிசளிப்பதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
ஓணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து!
அசர்பைஜானில் நடந்த உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை, இந்திய வீரர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றாலும், அவரை தனது சாமர்த்தியமான காய் நகர்த்தல்களால் பிரக்ஞானந்தா திணறச் செய்தார்.
மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பரிசு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது நிறுவனம் தயாரித்துள்ள மின்சார காரை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.