உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று BF.7 குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மதியம் ஆலோசனை மேற் கொண்டனர்.
பிற்பகல் 3 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்.


சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உருமாறி ஒமேக்ரான் தொற்று BF.7 வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்று பரவலை தடுப்பதற்காக 22.12.2022ம் தேதி அன்று பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநிலங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் 23.12.2022ம் தேதி மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனுஷ்க் மண்டாவியா உடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலமாக இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கலந்துக்கொண்டனர்.
இதில் தமிழகத்தில் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகள் குறித்தும், இதுவரை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், தமிழகத்தில் கொரோனா நிலவரம், தடுப்பூசி செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
மேலும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி கொரோனா பரிசோதனை செய்யவும், தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை மேற்கொள்ளவும், நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுரையின்படி, மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூட வேண்டாம் என்றும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் எல்லா நேரங்களிலும் அனைவரும் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும். முதியவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும், பூஸ்டர் ரோஸ் தடுப்பூசிகள் போடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் தேவையான மருத்துவர்களுக்கும், தடுப்பூசிகளும், ஆஸ்பத்திரி படுகைகளும் போதுவான அளவில் உள்ளனவா எனவும் அதிகாரிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.