
பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைச் செய்ய நேரிடும் என பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
பஞ்சாப் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு, மசோதாக்கள் தொடர்பான விளக்கம் கேட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் பதில் கடிதம் அனுப்பவில்லை.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சரை எச்சரிக்கும் வகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “என் கடிதங்களுக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதில் அளிக்காவிட்டால், குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பேன். கடிதங்களுக்கு முறையாகப் பதில் அளிக்காவிடில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சாசன நடைமுறைப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பேன். பதிலளிக்காததன் மூலம் அரசமைப்புச் சட்ட நடைமுறை சீர்குலைந்துவிட்டது. முதலமைச்சர் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸை திணறவைக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் அசுர வசூல்!
இதற்கு முன் பல்வேறு கடிதங்கள் எழுதியும் பதில் வராததால் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிருப்தி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.