மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான AW 139 வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் விமானி உள்ளிட்ட 4 பயணிகளுடன், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தது. புனே மாவட்டம் பவுட் என்ற சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது.


இந்த விபத்தில் விமானி ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 3 பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மற்றும் போலிசார், காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


