Homeசெய்திகள்இந்தியா”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது.." - NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச...

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

-

- Advertisement -

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்றக் கூடாது. பொறுப்புணர்வுடன் செயல்படாவிட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் நடைபெறும்” என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது.." - NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, தேர்வுகள் நடத்தும் முறையில் தேசிய தேர்வு முகமை பல்வேறு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, வினாத்தாள் கசிவு இல்லாமல் பல ஆண்டுகளாக தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி வரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) போன்ற அமைப்புகளிடமிருந்து NTA பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

we-r-hiring

“இது வெறும் ஒரு மாணவரின் பிரச்சினை மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் கனவுகள், உணர்வுகள் மற்றும் பல ஆண்டுகளாக செய்த உழைப்பும் இதில் அடங்கியுள்ளது. UPSC தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாதபோது, NEET தேர்வில் மட்டும் ஏன் தொடர்ந்து தோல்விகள் ஏற்படுகின்றன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய தொடர்புடையவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தேர்வு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிபுணர்களின் ஆலோசனையுடன் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய NEET தேர்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை இந்த வழக்கு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்….

MUST READ