Homeசெய்திகள்இந்தியாசாலை அமைக்க முடியாவிட்டால் ஹெலிகாப்டர் கொடுங்கள் – அமித்ஷாவிடம் சத்தீஸ்கர் கிராம மக்கள் மனு

சாலை அமைக்க முடியாவிட்டால் ஹெலிகாப்டர் கொடுங்கள் – அமித்ஷாவிடம் சத்தீஸ்கர் கிராம மக்கள் மனு

-

- Advertisement -

சாலை அமைக்க முடியாவிட்டால் அவசர கால பயன்பாட்டிற்கு ஹெலிகாப்டர் வழங்க கோரி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கிராம மக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.சாலை அமைக்க முடியாவிட்டால் ஹெலிகாப்டர் கொடுங்கள் – அமித்ஷாவிடம் சத்தீஸ்கர் கிராம மக்கள் மனு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டு வரும் பழங்குடியின கிராம மக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அனுப்பிய மனு தற்போது கவனம் பெற்றுள்ளது. “சாலை அமைக்க முடியாவிட்டால் அவசர தேவைகளுக்காவது ஹெலிகாப்டர் வழங்குங்கள்” என்ற அவர்களின் கோரிக்கை சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

we-r-hiring

மருகி கிராமத்தை இணைக்கும் சுமார் 12 கிலோமீட்டர் நீள சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் கிடப்பில் இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒப்பந்தக்காரர்கள் பணிகளை தொடங்கியபின் பெரிய பள்ளங்களை தோண்டி, பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணிகளை ஆரம்பித்தாலும், அவை பின்னர் முழுமையாக நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உருவான பள்ளங்களில் மழைநீர் தேங்கி, சாலை மேலும் மோசமடைந்துள்ளது. கற்கள், சரளைகள் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் முதல் நடைபயணமும் கடினமாக மாறியுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அவசர மருத்துவ சூழ்நிலைகளில் நிலைமை மேலும் மோசமடைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் அவசர நோயாளிகளை கட்டிலில் சுமந்து பிரதான சாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கிராமத் தலைவர் கூறுகையில், “மாவட்ட அதிகாரிகள் முதல் ஆட்சியர் வரை பலமுறை மனு அளித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் சாலைப் பணிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு நக்சலைட் அச்சுறுத்தலே காரணம் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும், தற்போது இந்த பகுதி “நக்சலைட் இல்லாத பகுதி” என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் ஏன் தாமதமாகின்றன என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும், தங்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த ஹெலிகாப்டர் கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்க்கும் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்” ‘எக்ஸ்’ கணக்கு முடக்கம் – இளைஞர்கள் அதிர்ச்சி

MUST READ