Homeசெய்திகள்இந்தியாஉச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றாார் தமிழ்நாட்டை சேர்ந்த மோகனா!

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றாார் தமிழ்நாட்டை சேர்ந்த மோகனா!

-

- Advertisement -

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மூத்த வழக்கறிஞர் மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றாார் தமிழ்நாட்டை சேர்ந்த மோகனா!

இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக இருந்த நிலையில் சமீபத்தில் அந்த எண்ணிக்கை 38-ஆக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் கூடி 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் உட்பட 5 பெயரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் 4 மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஒருவரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் நேற்று அரசிதழ் வெளியிட்டது.

we-r-hiring

அதன்படி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு , மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசேகர் , மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா , ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி , மூத்த வழக்கறிஞர் வி.மோகனா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 5 நீதிபதிகள் இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் , உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க பதவியேற்று கொண்டனர்.

இதில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இன்று பதவி ஏற்று கொண்ட தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வி.மோகனா, 1950-க்கு பிறகு உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிபதியாக நியமனம் செய்யப்படும் 11-வது நீதிபதி என்பதும் , 2-வது பெண் நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட தற்போதைய மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஜூன் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றி வரும் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி பங்கஜ் மிட்டல் ஆகியோர் ஓய்வு பெற உள்ள நிலையில் உச்சநீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 35-ஆக மீண்டும் குறையக்கூடும்.

முப்படைகளின் தலைமைத் தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் ஜெனரல் அனில் சவுகான்!

MUST READ