Homeசெய்திகள்இந்தியாசிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் – ஜூலை 1 முதல் அமல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் – ஜூலை 1 முதல் அமல்

-

- Advertisement -

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது என சிபிஎஸஇ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் – ஜூலை 1 முதல் அமல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் புதிய சுற்றறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

we-r-hiring

சுற்றறிக்கையின் படி, மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயம் கற்க வேண்டும் என்றும், அவற்றில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், கட்டாயமாக கற்பிக்கப்படும் மூன்றாவது மொழிக்காக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்றும், அந்த மொழிக்கான மதிப்பீட்டை சம்பந்தப்பட்ட பள்ளிகளே மேற்கொள்ளும் என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இந்த புதிய மும்மொழிக் கொள்கை மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்துவதோடு, இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் அதிகரிக்கும் என கல்வி வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், இந்த அறிவிப்பு கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மொழிக் கொள்கை தொடர்பான விவகாரங்களில் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின், பாடத்திட்டம் மற்றும் மொழிக் கற்பித்தல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…

MUST READ